கோவையில் உள்ள தனியார் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை : மாநகர் முழுவதும் பதற்றம்

கோவை : கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவலின் அடிப்படையில், மாநகர காவல்துறையினர் இரவு முழுவதும் மாநகரில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

கோவை : கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவலின் அடிப்படையில், மாநகர காவல்துறையினர் இரவு முழுவதும் மாநகரில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சட்டம், ஒழுங்கு துணை தலைவர் ஜெயந்த் முரளி தலைமையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் போன்று கோவையிலும் நடத்த வேண்டுமென்று தீவிரவாதிகள் முடிவு செய்திருப்பதாக வந்த உளவுத் துறையின் தகவலின்படி, கோவை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் இரவு முழுவதும் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க அனைத்து விடுதிகளிலேயும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கோவை மத்திய மாநகரில் உள்ள 87 தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் நடைபெற்றது. காவல்துறையினர் ஒவ்வொரு குழுக்களாக சென்று அனைத்து விடுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அறைகளில் தங்கியிருந்த மக்களிடம் அவர்களுடைய அடையாள அட்டைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்திருந்த பெட்டிகளை தீவிரமாக சோதனை செய்தனர். இப்படி நடைபெற்ற சோதனையில் இலங்கை, அந்தமான் - நிக்கோபர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர். அப்போது, இவர்கள் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் உறவினர்கள் என தெரியவந்தது.

தீவிரவாத அச்சுறுத்தலையடுத்து, கோவையில் மாநகர, மாவட்ட போலீசார் பல்வேறு கட்ட சோதனைகளை தீவிரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...