கோவை : கோவை மாவட்டத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நுழையலாம் என்ற தகவலின் அடிப்படையில், விடிய விடிய போலீசார் புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தினர்.
கோவை : கோவை மாவட்டத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நுழையலாம் என்ற தகவலின் அடிப்படையில், விடிய விடிய போலீசார் புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எழுந்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு 12 மணி முதல் தற்போது வரை மாநகர மாவட்ட போலீசார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,கருமத்தம்பட்டி - கணியூர் சுங்கச்சாவடியில் இருந்து கோவைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கார், லாரி, பேருந்துகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நகருக்குள் நுழையலாம் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையான தணிக்கைக்கு பிறகு நகருக்குள் உள்ளேயும், வெளியேயும் அனுமதிக்கப்படுகிறது.