கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி : இந்து அமைப்பு தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக எழுந்த தகவலையடுத்து, இந்து இயக்கங்களின் முக்கிய தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக எழுந்த தகவலையடுத்து, இந்து இயக்கங்களின் முக்கிய தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எழுந்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் தற்போது வரை மாநகர மாவட்ட போலீசார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 



மேலும், தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல, இந்து அமைப்பின் முக்கிய தலைவர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தீவிரவாத ஊடுருவலையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்து முன்னணியைச் சேர்ந்த மூகாம்பிகை மணி உட்பட 12 இந்து இயக்க தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...