தி.மு.க. கொடி கட்டிய காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் : இருவர் கைது

திருப்பூர் : திருப்பூரில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டு ச் சென்ற காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டு ச் சென்ற காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் - மங்கலம் சாலையிலுள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக தி.மு.க. கட்சி கொடியுடன் வந்த மஹிந்திரா ஜைலோ காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 



காரின் பின்பக்க சீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஐம்பது கிலோவும், 35க்கும் மேற்பட்ட வெளி மாநில மதுபான பாட்டில்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, காரில் இருந்த சதீஸ்குமார், ஞானபிரகாஷ் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். 



மேலும், அவர்களிடமிருந்து பத்தாயிரம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதிஷ்குமார் தி.மு.க. கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். 

இதனிடையே, தி.மு.க. பிரமுகர் கட்சி கொடி கட்டப்பட்ட காரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்தது அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...