அர்ஜுன் சம்பத் பூஜை செய்த துப்பாக்கி யாருடையது தெரியுமா ?

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத், ஆயுத பூஜை தினத்தன்று இரு துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுக்கு பூஜை செய்து, அந்தப் புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவேற்றினார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், காவல் துறை ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து கூறுகையில், அர்ஜுன்சம்பத் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அந்த துப்பாக்கி அவருடையது தானா? அப்படி அவருடையதென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினோம். அர்ஜுன் சம்பத்  வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை காவலர் ஒருவர் அவரது வீட்டின் அருகே காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ஆயுத பூஜை தினத்தன்று அந்த போலீஸ்காரரின் துப்பாகியை வாங்கித்தான் அர்ஜுன்சம்பத் பூஜை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பாக வைக்க வேண்டிய துப்பாக்கியை, அடுத்தவரிடம் கொடுத்த அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...