திருப்பூர் : புதிய பாடத்திட்டம் என்பதால் நடைபெற்று முடிந்த டெட் தேர்வில் அதிக ஆசிரியர்கள் தோல்வி அடைந்ததாக திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : புதிய பாடத்திட்டம் என்பதால் நடைபெற்று முடிந்த டெட் தேர்வில் அதிக ஆசிரியர்கள் தோல்வி அடைந்ததாக திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 சதவித பங்களிப்புடன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடப் பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். அப்போது, அவர் பேசியதாவது :- தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன், பள்ளி, கல்வி குறித்து கலந்துறையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் இதில் தொழில் அதிபர்கள், அப்பகுதி பொது மக்கள், தன்னார்வளர்கள் பலர் கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறையில் உள்ள சந்தேகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையினிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது :- புதிய பாடத்திட்டம் என்பதால் நடைபெற்று முடிந்த டெட் தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்ச்சி அடையாமல், தோல்வி அடைந்துள்ளனர். எனினும், தேவையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு கூடுதல் தகுதி தேர்வு மட்டுமே. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவைப்படுவோர், தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமித்து கொள்ளலாம். அவ்வாறு நியமிக்கும் ஆசிரியர்களின் விபரங்களை, பள்ளி கல்வித்துறை தெறிவித்துவிட்டால், தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியமாக அரசு நிர்ணயித்த பத்தாயிரத்தை அரசே வழங்கும், என தெரிவித்தார்.