கோவையின் முக்கிய வணிக வளாகமான ஃப்ரூக் பீல்ட்ஸில் கமாண்டோ போலீசார் திடீர் சோதனை

கோவை : கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் ஒன்றான ஃப்ரூக் பீல்ட்ஸில் கமாண்டோ போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை : கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் ஒன்றான ஃப்ரூக் பீல்ட்ஸில் கமாண்டோ போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



கோவையில் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து துவங்கிய பாதுகாப்பு சோதனைகள் தற்போது வரை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 



மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை கோவையில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஃப்ரூக் பீல்ட்ஸ் மாலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



அத்துடன், வெடிகுண்டு நிபுணர்கள், தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.



இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக கமாண்டோ படையினரும் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பன்னாட்டு விமான நிலையம், விமான நிலையம் அருகில் உள்ள ஃபன் மால் ஆகிய இடங்களிலும் சோதனைகளை மேற்கொள்ளப்பட இருக்கிறது,” தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...