மேட்டுப்பாளையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி ஆய்வு

கோவை : கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையையடுத்து, மேட்டுப்பாளையத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையையடுத்து, மேட்டுப்பாளையத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த இலங்கை, பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து 6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவையின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள பில்லூர், கோபனாரி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் குழுக்களாக அனுப்பப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது .

மேட்டுப்பாளையம் ஓடந்துறை காவல் சோதனை சாவடி பகுதியில் தீவிர வாகன தணிக்கை நேற்று நள்ளிரவு முதல் நடைபெற்று வருகிறது. கோவையில் இருந்து உதைக்கு வரும் வாகனங்களும், நீலகிரி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களும் அனைத்தும் இந்த சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், உள்ளூர் போலீசார், சிறப்பு அதிரடி படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் என அனைவரும் இணைந்து தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து காவல் சட்டம், ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி ஜெகதீஷ் முரளி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பவானி ஆற்றுப் பாலம் அருகே நடைபெற்று வரும் வாகன தணிக்கை மற்றும் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக மலை மாவட்டமான கோவை, நீலகிரி மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பின்பு நீலகிரியில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...