கோவை : மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் பெற ரு. 600 செலுத்தாத மாணவிக்கு வக்கீல் நோட்டீசை தனியார் பள்ளி நிர்வாகம் அனுப்பிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம் அடுத்த டி.வி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது 16 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். இதனையடுத்து, வேறொரு பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்த்துவதற்காக மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் பள்ளியில் கேட்டுள்ளனர். அப்போது, மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் தருவதற்கு 600 ரூபாய் செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் கேட்டுள்ளனர். அதற்கு கண்ணன் கேள்வி எழுப்பியதால், மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதலின் நகலை மட்டும் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, அவரது மகள் வேறு ஒரு பள்ளியில் தற்போது 11-ம் வகுப்பு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து கண்ணனுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், பள்ளியைப் பற்றி அவதூறாக பேசியதாகவும், நிலுவையில் உள்ள கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், பள்ளியை பற்றி அவதூறாக பேசியதற்கு ஏன் வழக்கு தொடக்கூடாது என அதில் கேட்டிருந்தனர். இதற்கு கண்ணன் அவரது வழக்கறிஞர் மூலம் கலந்தாலோசித்த பின்னர், பள்ளிக்கு செலுத்த வேண்டிய 600 ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார். எனினும், இதுவரை மாணவிக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இதுவரை வழங்காமல் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், தனது 16 வயது மகளுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் கண்ணன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து கண்ணன் கூறியதாவது :- மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க பணம் கேட்கப்பட்டது. இது பற்றி குறித்து கேள்வி எழுப்பியதால் எனது மகளுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நன்றாக படிக்கக்கூடிய எனது மகள் 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த நிலையிலும், அவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை எனவும், ஏன் வழக்கு தொடுக்கக் கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதால் மகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கடும் மன உளைச்சலில் உள்ளனர். உடனடியாக அரசு தலையிட்டு எங்களுடைய மகளின் மதிப்பெண் அசல் மதிப்பெண் சான்றிதழை வாங்கி தர வேண்டும், என வலியுறுத்தினார்.
இதனிடையே, இது குறித்து பள்ளி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.