சூலூர் விமானப் படை தளத்தை குறி வைத்துள்ள தீவிரவாதிகள் : வேளாங்கண்ணி திருவிழாவின் போது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது அம்பலம்

கோவை : சூலூர் விமானப் படை தளம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் நாகை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடக்கும் காலகட்டத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.

கோவை : சூலூர் விமானப் படை தளம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் நாகை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடக்கும் காலகட்டத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக, டெல்லியின் சி.ஐ.எஸ்.எஃப். தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் ஷிஷிர் குமார் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் இந்துக்களைப் போன்று நெற்றியில் திலகமிட்டு சுற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இல்யாஷ் அன்வர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கும்பல் கடந்த 21-ம் தேதி கோவையில் நடமாடி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோவில், வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி, சூலூர் விமானப்படை தளம், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மதம்சார்ந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, வேளாங்கண்ணி கோவில் திருவிழா நடைபெறும் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்., 08-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த தாக்குதல்களை நடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, உள்ளூர் போலீசார் மற்றும் பிற உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...