காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் பார்வையிட தமிழக எம்.பி.க்களுக்கு வலியுறுத்த முடிவு

கோவை : காஷ்மீர் நிலவரம் குறித்து தமிழக எம்.பி.க்கள் நேரில் பார்வையிட்டு, அங்குள்ள நிலைமையை தெரிவிக்க வலியுறுத்துவோம் என காஷ்மீர் மக்களோடு கைகோர்ப்போம் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை : காஷ்மீர் நிலவரம் குறித்து தமிழக எம்.பி.க்கள் நேரில் பார்வையிட்டு, அங்குள்ள நிலைமையை தெரிவிக்க வலியுறுத்துவோம் என காஷ்மீர் மக்களோடு கைகோர்ப்போம் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மக்களோடு கைகோர்ப்போம் கூட்டமைப்பினர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது :- காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை. மற்ற மாநிலங்களுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மறைமுக மிரட்டலாகவே இதை பார்க்கிறோம். காஷ்மீரில் அடக்குமுறைகள் மற்றும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடக்கிறது. அங்குள்ள தற்போதைய சூழலை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும். குரலற்றவர்களின் குரல் என கூறப்படும் ஊடகங்கள் கூட முடக்கப்பட்டு உள்ளது. அங்கு உள்ள மக்களின் நிலை குறித்து முழுமையான தகவல்கள் இல்லை.



காஷ்மீர் மாநிலத்தின் நிலை குறித்து அறியச் சென்ற இடதுசாரி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இது அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாநிலத்தின் தலைவர்களை வீட்டு காவலில் அடைத்து வைத்திருப்பது, தற்போது அங்கு அமைதியான சூழல் நிலவி வருவதாக மத்திய அரசு கூறுவது நம்பும்படியாக இல்லை. பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே மக்களிடம் கருத்து கேட்காமல் 370 பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏகபத்திய செயல்பாட்டைக் கண்டித்து ஜனநாயக வழியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். காஷ்மீர் நிலவரம் குறித்து தமிழக எம்.பி.க்கள் நேரில் பார்வையிட்டு, அங்குள்ள நிலைமையை தெரிவிக்க வலியுறுத்துவோம், எனக் கூறினர். 

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர் பார்த்திபன், புரட்சிகர இளைஞர் கழக பொறுப்பாளர் பெரோஷ்பாபு, தமிழர் கழக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நேரு தாஸ், வி.சி.க கட்சி மாவட்ட செயலாளர் குரு ,சி.பி.ஐ.(எம்.எல்) மாவட்ட பொறுப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 13 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...