மேட்டுப்பாளையத்தில் அரசு விடுமுறையை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பு

கோவை : மேட்டுப்பாளையம் அருகே அரசு விடுமுறை அறிவித்தும், அறிவிப்பை மீறி இன்று செயல்பட்ட தனியார் பள்ளியை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே அரசு விடுமுறை அறிவித்தும், அறிவிப்பை மீறி இன்று செயல்பட்ட தனியார் பள்ளியை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் கோகுலாஷ்டமி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இன்று பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் செயல்படும் (கேரவெல்) தனியார் பள்ளி இன்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவித்த ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், அரசு அறிவிப்பினையும் மீறி பள்ளிகள் செயல்படுவது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் இது குறித்து விசாரித்ததில் பள்ளி கல்வித்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு ஏ.பி.வி.பி அமைப்பினர் பள்ளிக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் உணவு இடைவெளிக்குப் பிறகு அவசர அவசரமாக பள்ளிக்கு விடுமுறை விட்டு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பினர்.

இது குறித்து பேசிய அந்த அமைப்பினர், "அரசு விடுமுறை நாட்களில் இதுபோன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் அரசு விடுமுறை நாட்களில் தொடர்ந்து பள்ளிகள் செயல்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைப் பள்ளி கல்வித்துறை வேடிக்கை பார்க்காமல், அரசு அறிவிப்பினை மதிக்காமல் செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...