கோவை : தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிடவில்லை என்று போலீஸ் டி.ஜி.பி திரிபாதி விளக்கமளித்துள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு திடீரென மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பி.களுக்கும் வாகன சோதனை மற்றும் சுங்கச்சாவடி சோதனையில் ஈடுபடுமாறு டி.ஜி.பி. திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளார். இதையடுத்து, கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயம், மசூதிகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உக்கடம், கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்கள் வெளியானது. ஆனால், தீவிரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று போலீஸ் டி.ஜி.பி திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.