இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயாராக இருக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவுறுத்தல்

கோவை : கோவையில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையில் இருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயாராக இருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். 

இலங்கை தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்று, தமிழகத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது, தாக்குதல் நடத்த பயங்கரவாத கும்பல் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.



இதனிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- 2 ஆயிரம் போலீசார் கோவை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் என வெளியான இரண்டு புகைப்படங்கள் காவல் துறையினர் வெளியிடவில்லை. இதுவரை யாரையும் குறிப்பிட்டு சந்தேகிக்கவில்லை. கோவில்கள், மால்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பகுதியிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம். பாதுகாப்பு துறைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளனர், எனக் கூறினார். மேலும், இந்திய இரானுவம் மற்றும் விமானப்படையை தயார் நிலையில் வைக்க கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் கேட்டுகொண்டுள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...