கோவை : கோவை மாவட்டத்தில் வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை சீர்குலைக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என மத்திய உளவுப்பிரிவு போலீசார், தமிழ்நாடு காவல்துறையை உஷார் படுத்தியுள்ளனர்.

எனவே, கோவையில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடந்தது போல, தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டங்கள் வகுத்து உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்காக இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ஆறு பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார், தமிழ்நாடு காவல்துறையை உஷார் படுத்தியுள்ளனர். குறிப்பாக, இந்த தாக்குதல் கோவை மாநகரை மையப்படுத்தி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், விநாயகர் சதுர்த்தியை மையப்படுத்தி இந்த தாக்குதல்கள் நடைபெறலாம் என சந்தேகிக்கும் போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணிகளில் தீவிரம் அடைந்து உள்ளனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் நேற்றிரவு முதல் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கிய அரசு அலுவலகங்கள், முக்கிய தேவாலயங்கள், கோவில்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றை இது போன்ற நேரங்களில் சரியாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள காவல்துறை, பொதுமக்களுக்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.