திருப்பூர் : செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்டெர்நெட்டுடன் கூடிய கணிணிமயமாக்கப்பட்ட வகுப்பறைகளாக மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கலையரங்கத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள வகுப்பு அறைகள் இன்டர்நெட் வசதியுடன் கூடிய கணினிமயமாக்கப்பட்ட வகுப்பறைகளாக மாற்றப்படும். மாணவர்களிடையே விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கு தலா ரூ. 20 லட்சம் செலவில் 5 ஆண்டுகள் செயல்படக்கூடிய அளவில் அட்டல் டிங்கர் லேப் செயல்படுத்தப்படும். மலேசியாவில் உள்ள தன்னார்வ அமைப்பு மூலம் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்க்கு அடுத்தபடியாக டேப்லட் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, எனக் கூறினார்.

இதனிடையே, பல்லடம் பகுதியில் பவர் கிரிட் நிறுவனம் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகளை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தது குறித்து கேள்வி கேட்ட போது, “விவசாய நிலங்களில் டவரில் அமைப்பது குறித்து ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது. பல்லடம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து மீண்டும் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,” என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.