2019-20-ம் ஆண்டில் கோவைக்கு ரூ. 19,425 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் : மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவிப்பு

கோவை : கோவை மாவட்டத்திற்கான 2019-20-ம் ஆண்டிற்கான வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டார்.

கோவை : கோவை மாவட்டத்திற்கான 2019-20-ம் ஆண்டிற்கான வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ் வெங்கட்டரமணன், கனரா பேங்க் துணை பொது மேலாளர் இரமேஷ், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் இசக்கிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியதாவது :- ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக ரூ. 19,425 கோடிக்கு கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

2019-2020ஆம் வருடத்திற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ. 7,440 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ. 8,673 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.3,312 கோடி என ஆக மொத்தம் ரூ.19,425 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதிகளில் புதிய ஏ.டி.எம்.களை துவங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை என்ற காலஅளவின்படி செயல்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் வங்கி சேவையினை பயன்படுத்தி கொள்ளலாம், என கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...