கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், (பொள்ளாச்சி) அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வி, வட்டாட்சியர் தணிகைவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :- நகரப்பகுதிகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைங்கள் என பல்வேறு மருத்துவ வசதிகள் வாய்ப்புகள் உள்ளபோதிலும், மக்கள் பெருமளவில் தங்களது சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைதான் நாடி வருகின்றனர். எனவேதான், அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கக்கூடிய வகையில், அதிநவீன சிகிச்சை கருவிகள் வழங்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டும் வருகின்றது. அதனைபோலவே, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பார்க்க வருவோர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர், கழிப்பாறை மற்றும் தங்கும் அறை ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதிதிட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டடப்பணிகள் விரைவில் முடித்து மருத்துவ பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் ஒரு நாளைக்கு 1,200 முதல் 1,750 புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்;. மேலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சையும், பிரசவங்களுக்கான சிகிச்சையும், இருதய சிகிச்சை மற்றும் அனைத்து வகை சிகிச்சைகளும் மிக சிறந்த முறையில் இங்கு அளிக்கப்படுகின்றது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை, உள்நோயாளிகள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை மையம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை, சிறப்பு வார்டு ஆகிய பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாலும், கீழ்நிலையிலுள்ள மருத்துவகள், செவிலியர்கள், இதரபணியாளர்கள் அரசின் திட்டங்களை பெறுப்புணர்ந்து செயல்படுத்திட வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் தரம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மருத்துவ கருவிகளின் தேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மருத்துவ கருவிகளின் தேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.