கோவை : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், நீர்நிலைகள் மாசில்லாத விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வலியுறுத்தி திராவிர் விடுதலை கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொதுமக்களின் நீர் ஆதாரமாக உள்ள ஆறு, ஏரி, குளம், கிணறு மற்றும் வாய்க்கால் ஆகியவற்றில் கரைக்கும் செயல் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விநாயகர் சிலைகள் குறித்தும், அதை கரைப்பது குறித்தும் பல வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சுட்ட களிமண், பிளாஸ்டிக் ஆகியவற்றில் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் மனிதர்கள், விலங்குகள் தாவரங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன வண்ணப் பூச்சுகள் பூசிய சிலைகளை நீர்நிலைகளில் கட்டாயம் கரைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி இன்று திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.