கோவை : மேட்டுப்பாளையத்தில் ரூ. 8 கோடி செலவில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டும், அதற்கு தேவையான உபகரணங்கள் அளிக்கப்படாததால், பள்ளி கட்டிடத்தில் செயல்படும் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இரு அமர்வுகளாக வகுப்புகள் நடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போது, அதற்கு தனியாக கட்டிடம் இல்லாததால், தற்காலிகமாக காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையிலேயே ஒரு பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்று கொடுக்கப்பட்டது. போதிய இடவசதி இல்லாததால் இங்கு மாணவர்களின் சேர்க்கை என்பது குறைவாக இருந்தது. தற்போது, இந்த கல்லூரியில் 300-க்கும் மேற்பட்டமாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதற்கிடையே, கல்லூரிக்காக காரமடை அருகே உள்ள குட்டையூர் மாதேஸ்வரன் மலைப்பகுதியில் 5 1/2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு ரூ. 8 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கபட்டது. இதையடுத்து, இந்த கல்வி ஆண்டில் புதிய கட்டிடத்தில் கல்லூரி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதியதாக கட்டப்பட்ட கல்லூரியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில தேவையான டேபிள், பெஞ்ச், இருக்கைகள் இதுவரை அளிக்கப்படவில்லை. மேலும், புதிய கட்டிடத்தில் தரமான அனைத்து வகையான ஆய்வுகளுக்கும் அறைகள் ஒதுக்கபட்டாலும், அதற்கு தேவையான பொருட்கள் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், புதிய கட்டிடம் ஏற்படுத்தப்பட்டும் எவ்வித பயனும் இன்றி, அரசு கலை கல்லூரியானது பழையபடி பள்ளி வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.
மாணவ, மாணவியர்களுக்கு படிப்பதற்கு தேவையான இடவசதி இருந்தால்தான், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும். ஆனால், இந்த பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், சில மாணவர்களுக்கு காலையிலும், மீதமுள்ள மாணவர்களுக்கு பிற்பகலிலும் பாடம் கற்பிக்கூடிய நிலைதான் உள்ளது. இதனால், மாணவர்களுக்கு சுகாதாரமான இடத்தில் அழகான கட்டிடம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு தேவையான பொருட்களை பெற அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், புதியதாக அமைக்கப்பட்ட கட்டிடம் வீணாக பயனற்று உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் உடனடியாக பெற்று, புதிய கட்டிடத்தின் கல்லூரி செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.