கோவை : கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் விடுதியில், நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மருதமலை சாலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மட்டுமின்றி அண்டை மாநில மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கென பல்கலைக்கழக வளாகத்தில் தனித்தனி விடுதிகள் உள்ளன. அதேபோல, சர்வதேச மாணவர்களுக்கென பிரத்யேக விடுதியும் இங்கு உள்ளது.
இந்த நிலையில், சர்வதேச மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவர் ஒருவர் நேற்று இரவு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் கணேசன், நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் உடனடியாக தகவலளித்தார். பின்னர், அங்கு விரைந்த வந்த ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய போலீசார், உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கிய மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த மாணவர் நேபாள நாட்டின் பரத்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் நியூபானே (26)என்பதும், முதுகலை பயிர் நோயியல் துறையில் இரண்டாமாண்டு பயின்று வரும் இவர், நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, பின் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள ஆர்.எஸ். புரம் காவல்நிலைய போலீசார், விடுதி மாணவர்கள் மற்றும் காப்பாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கல்லூரி வளாகத்தில் சக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.