கோவையில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைப்பு

கோவை : கோவையில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பிரத்தியேக மணல் கடத்தல் தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பிரத்தியேக மணல் கடத்தல் தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, காருண்யா ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நொய்யல் ஓடைகளில் இருந்து மணல்களை சட்டவிரோதமாக கடத்தி செல்கின்றனர். மேலும், இவர்கள் அதிகமாக கழுதை, மாட்டுவண்டி உதவியுடன் இந்த மணல் கடத்தல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். தொடர்ச்சியாக, நடைபெற்று வரும் இந்தக் கடத்தலை தடுக்க அப்பகுதி மக்கள் அடிக்கடி மணல் கடத்தல் வாகனங்களை சிறை பிடிப்பதும், பின்னர் காவல்துறையிடம் ஒப்படைப்பதுமாக இருந்து வந்தது. இதனால், மணல் கடத்தலை தடுக்க வரும் பொதுமக்களுக்கு சமூக விரோதிகளின் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டது.



இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மணல் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது மணல் கடத்தல் சிறப்பு தடுப்பு குழுவினரை உருவாக்கியுள்ளார். அதில், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், கைது செய்யவும் மணல் கடத்தல் தடுப்பு பிரத்யேக வாகனம் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனம் தொடர்ந்து கடத்தல் அதிகம் நடைபெற்ற பகுதிகளில் ரோந்து செல்கிறது. மேலும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் தகவலாளி உதவியுடன் இந்த வாகனம் குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இந்த வாகனமானது இரவு 8 மணி முதல் பகல் 8 மணிவரை தீவிரமாக செயல்படும். இப்படி கைது செய்யப்படும் நபர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

தற்போது கடந்த சில நாட்களாக மணல் கடத்தல் பிரத்யேக வாகனம் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்து செல்வதால், மணல் கடத்தல் சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...