ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது

டெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற உதவினார் என்பதுதான் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு எழுந்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது 2017ல் சி.பி.ஐ. ஊழல் வழக்கையும், அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கையும் பதிவு செய்தன. கடந்த 2007ல் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்க நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அணுகியபோது, அது நிராகரிக்கப்ப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியபோது, 4.6 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்க ப.சிதம்பரம் அனுமதித்தார். அதற்கு கைமாறாக, மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பீட்டர் முகர்ஜி உதவ வேண்டும் என சிதம்பரம் கூறியதாக வாக்குமூலத்தில் இந்திராணி தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில், வருமான வரி சோதனையில் 305 கோடி ரூபாய் முதலீட்டை ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ஈர்த்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை அணுகிய இந்திராணி முகர்ஜி, மூன்றரை கோடி ரூபாயை அவருக்குச் சொந்தமான அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் நிறுவனத்தின் கணக்கில் செலுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே, மகள் ஷீனா போராவை கொலை செய்தது தொடர்பாக பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் அதிரடியாக நுழைந்த சிபிஐ, அமலாக்கதுறையினர் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணைக்காக அவரை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...