கரையாம்பாளையம் குட்டையை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : சூலூர் அருகே உள்ள கரையாம்பாளையத்தில் நடைபெறும் குட்டையை தூர்வாரும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

கோவை : சூலூர் அருகே உள்ள கரையாம்பாளையத்தில் நடைபெறும் குட்டையை தூர்வாரும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது :- தமிழக அரசு விவசாயத்திற்கென்று அதிக அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்தும், அதிக முக்கியத்துவம் அளித்தும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த மாதம் 20-ம் தேதி விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கிராமங்கள் தோறும், சிறுபாசன குளங்கள், குட்டைகள் மற்றும் ஊரணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களில் உள்ள 5,000 சிறுபாசன குளங்கள் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டிலும், 25,000 குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ஒரு லட்சம் மதிப்பீட்டிலும், தூர்வாரும் பணிகள் கூடுதல் சிறப்பு நிதியிலிருந்து ரூ. 500 கோடி செலவில் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் உள்ள 5,000 சிறுபாசன குளங்கள் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டிலும், 25,000 குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ரூ. 2 லட்சம் மதிப்பீட்டிலும், நீர் உள்ளே வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைப்புகள் ஏற்படுத்தவும், தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் ரூ. 750 கோடி செலவிலும், மொத்தமாக ரூ. 1,250 கோடி செலவில் சிறுபாசன குளங்கள், குட்டை மற்றும் ஊரணிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 சிறுபாசன குளங்கள் மற்றும் 210 குட்டை ஊரணிகள் தூர்வாரும் பணிகள் ரூ. 225 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2019-20-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் 1,829 பணிகள் ரூ. 499.68 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 45 பணிகள் ரூ.7.43 கோடியில் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நீர் வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள், நீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் பாசனதாரர்கள் தொகுப்பு வாயிலாக பணிகளை செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது.

 

இந்த திட்டத்தின் கீழ் கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள் முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டிடங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளை பலப்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பங்கேற்பு பாசன மேலாண்மையில் விவசாயிகள் தங்களை செவ்வனே ஈடுபடுத்தி, பங்களிப்பாக மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் பணமாகவோ, மனித உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ வழங்கிடவும், 90 சதவீதம் அரசின் நிதியாகவும் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது

வாய்க்கால்களில் நீர் செல்லும்போது வேறு எங்கும் அதிகளவில் நீர் விரையம் ஆகாமல் சரிசெய்ய வேண்டும். குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதுடன் தங்கள் பகுதிகளின் நிலத்தடி நீரைத் தேங்கச் செய்யும் வகையில் மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பருவ மழை காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிப்பதன் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம், என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...