பால் கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளின் துயரத்தை குறைக்கும் : தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி

கோவை : தமிழக அரசு பால் கொள்முதல் விலை திருப்தியானதாக இல்லை என்றாலும், இந்த கொள்முதல் விலை விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை : தமிழக அரசு பால் கொள்முதல் விலை திருப்தியானதாக இல்லை என்றாலும், இந்த கொள்முதல் விலை விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் விமானம் மூலம் சென்னை செல்ல வந்த முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமியை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், ஆறுகுட்டி, கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். அங்கு தமிழ்நாடு விவசாய சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி முதலமைச்சரிடம் மனு ஒன்றை அளித்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 147 கி.மீ. தூரம் செல்லும் நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் நதி மீட்புக்கு என தமிழக அரசு தனி அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளேன். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். தமிழக அரசு பால் கொள்முதல் விலை திருப்தியானதாக இல்லை என்றாலும், இந்த கொள்முதல் விலை விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளது," என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...