கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 72 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 72 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர், மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வீட்டுவரி புத்தகத்தை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, திரு.சரவணன், திரு.அண்ணாதுரை, ம.செல்வன், ஏ.ஜே.செந்தில்அரசன், மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), மாணிக்கம் (வருங்கால வைப்புநிதி), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.