கண்டிவழி மலைகிராமத்தில் சேதமடைந்த வீடுகள் விரைந்து சீரமைக்க நடவடிக்கை : கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி

கோவை : கண்டிவழி மலைகிராமத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உறுதியளித்துள்ளார்.

கோவை : கண்டிவழி மலைகிராமத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உறுதியளித்துள்ளார்.



ஆனைகட்டி மலைப் பகுதியில் உள்ள கண்டிவழி பழங்குடியின கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமையான வீடுகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் பருவமழையின் காரணமாக, 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2.1 லட்சம் ஒதுக்கீடு செய்தும், அங்குள்ள மலைவாழ் மக்கள் தினக்கூலிக்கு செல்வதால், எஞ்சிய தொகையை போட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.



எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மலைவாழ் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், சேதமடைந்த வீடுகளை பதிலாக பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டித் தர முடிவு செய்துள்ளனர். மேலும், பல்வேறு அரசு துறைகள், தனியார் அமைப்புகளும் பழங்குடியின மக்களின் வீடுகளை சீரமைக்கும் பணிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.



இந்த நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டிவழி மலைகிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள 20 குடியிருப்புவாசிகளுக்கு மொத்தம் ரூ. 82,000 நிவாரணத் தொகையை வழங்கினார். மேலும், வெள்ளத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும், தற்போது வழங்கப்பட்டுள்ள தொகை தற்காலிகமாக மேற்கூரைகளை சரிசெய்வதற்குத்தான், எனக் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...