மழைநீர் சேகரிப்பு குறித்து 150 மி.கி. தங்கத்தில் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல உருவம் பொறித்து விழிப்புணர்வு

கோவை : மழைநீர் சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி, 150 மி.கி. தங்கத்தில் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல உருவம் பொறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை : மழைநீர் சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி, 150 மி.கி. தங்கத்தில் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல உருவம் பொறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா. இவர், அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். பொங்கல் பண்டிகையின் போது மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். மேலும், சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.



தற்போது, மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி யு.எம்.டி ராஜா, 150 மி.கிராம் தங்கத்தில் குழாயில் இருந்து இரண்டு துளி நீர் வெளியேறுவது போல் வடிவமைத்து உள்ளார். இதனை செய்ய ஒரு நாள் ஆனதாகக் கூறிய அவர், மழை நீரை சேகரிக்க மக்கள் முன்வர வேண்டும் எனவும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இதனை உருவாக்கியதாக தெரிவித்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...