கோவை : துடியலூர் அருகே மாத்திரை சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞர் தனது தந்தையை ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : துடியலூர் அருகே மாத்திரை சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞர் தனது தந்தையை ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜன் (55). இவரும், இவரது மனைவியும் கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களை இவர்களது மகன் மோகன் குமார் (29) பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை மாத்திரை சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் தாயை தாக்கிய தந்தை கோவிந்தராஜனை மோகன்குமார் தடுக்க முற்பட்டுள்ளார். அப்போது, தந்தைக்கும், மகனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, ஆயிரத்தில் மோகன் குமார் அவரது தந்தையை அருகிலிருந்த சுத்தியலால் கால், தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால், அதிர்ச்சியடைந்த மோகன் குமார் என்ன செய்வது என்று அறியாமல் தந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், கோவிந்தராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் துடியலூர் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், உயிரிழப்பு குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து காவல்துறையினரிடம் தாமாகவே சம்பவத்தைக் கூறி மோகன்குமார் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.