கோவையில் அரசு பேருந்தில் விபத்தில் சிக்கி சிறுமி பலி

கோவை சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் தனது தாயாருடன் வந்து கொண்டிருந்த சிறுமி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் தனது தாயாருடன் வந்து கொண்டிருந்த சிறுமி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கமலா மில் காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் பாலமுருகன் மற்றும் பிரியா தம்பதியினர்.இவர்களுக்கு பிரவீனா என்ற 11 வயது பெண் குழந்தை உள்ளது.

இப்படியிருக்க, தாயார் பிரியாவும் சிறுமி பிரவீனாவும் செவ்வாய் மாலை சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது TN 58 N 2319 என்ற எண் கொண்ட பேருந்தின் பின் சென்று கொண்டிருந்த போது பேருந்தானது இடதுபுறம் ஒதுங்கியது.

இதில் தாயார் பிரியா நிலை தடுமாறி பேருந்தின் பின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டார்.

இதில் சிறுமி பிரவீனா படுகாயமடைந்தார். தாயார் பிரியாவிற்கு காயங்கள் ஏதுமின்றி உயிர் பிழைத்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிறுமியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பாக காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் முருகன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...