குரூப் பி, சி, டி பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து இ.பி.எப். ஊழியர்கள் கண்டன குரல் எழுப்பும் போராட்டம்

கோவை : அதிகாரிகளின் பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வை தேவைக்கு அதிகமாக நிரப்புவதும், மக்களுக்கு நேரிடையாக சேவை செய்யும் குரூப் பி,சி,டி பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து இ.பி.எப். ஊழியர்கள் கண்டன குரல் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : அதிகாரிகளின் பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வை தேவைக்கு அதிகமாக நிரப்புவதும், மக்களுக்கு நேரிடையாக சேவை செய்யும்  குரூப் பி,சி,டி பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து இ.பி.எப். ஊழியர்கள் கண்டன குரல் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வருங்கால வைப்புநிதி ஊழியர் சங்கம் சார்பாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். இதில், குரூப் பி,சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள பதவிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை கைவிட வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், அதே சமயம் குரூப் ஏ பிரிவு பதவிகளில் அதிகாரிகளை அதிக அளவு தேவையில்லாமல் புதிதாக சேர்ப்பதை நிறுத்த வேண்டும், குரூப் பி, சி மற்றும் டி ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி குரல் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் கோவை எம்.பி நடராஜன் பேசியதாவது :- களத்திலேயே ஊழியர்கள் ஒன்றுபட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இ.பி.எப். துறையில் அதிகாரிகளின் ராஜ்யமாக இருக்கிறது. கீழ்நிலை ஊழியர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் இருப்பது, 30 ஆண்டுகள் பணி செய்தாலும் பதவி உயர்வு விவகாரத்தில் தலையிடாமல், தங்களுக்கு மட்டும் பதவி உயர்வு ஊதிய உயர்வில் நாட்டம் செலுத்துவது என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில் இ.பி.எப் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய தலையீட்டை செலுத்துவேன், என்றார். 



முன்னதாக, இ.பி.எப். ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் ஜி.சுப்பிரமணி கூறுகையில், “கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இ.பி.எப். துறை மற்றும் மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கையைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நாள்தோறும் நடத்த உள்ளோம். இதன்தொடர்ச்சியாக, வரும் 28ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என தெரிவித்தார். 

இப்போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் செபஸ்டின், ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...