கோவையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்த சம்பவம் : அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் தப்பினர்

கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஏற்கனவே சுவர்கள் ஈரமாகி சில வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் மழை பெய்தது. இப்படியிருக்க அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் (கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரி) விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. புதிதாக நடந்து வரும் அடுக்குமாடி கட்டிடப் பணியின் போது, 2-ம் தளத்தில் போடப்பட்டு வந்த பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், 2-ம் தளத்தில் போடப்பட்டு வந்த கம்பிகள் கீழே சரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயம் என்பதால் முதலுதவி அளிக்கப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...