வடவள்ளி ரேசன் கடையின் பாமாயில் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலப்படும் : பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை : வடவள்ளி பகுதியிலுள்ள நியாய விலைக்கடை ஒன்றில் விநியோகித்த பாமாயில் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலந்திருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை : வடவள்ளி பகுதியிலுள்ள நியாய விலைக்கடை ஒன்றில் விநியோகித்த பாமாயில் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலந்திருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.



கோவை மாநகராட்சியின் 18-வது வார்டு பகுதியான வீரகேரளம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடை ஒன்றில் ஜூலியா என்ற பெண் கடந்த 1-ம் தேதி பாமாயில் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை இன்று சமையலுக்கு பயன்படுத்துவதற்காக பாக்கெட்டை பிரித்த போது, அதில் மண்ணெண்ணெய் வாசனை வந்துள்ளது. இருப்பினும், சந்தேகத்தின் பேரில் வானலியில் எண்ணெய்யை ஊற்றி அடுப்பு பற்ற வைத்துள்ளார். அப்போது, வானலி திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் பக்கத்து வீட்டு பெண்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களும், நியாய விலைக்கடையில் வாங்கிய பாமாயிலை சோதித்து பார்த்த போதுதான், அனைத்து பாமாயில் பாக்கெட்டுகளிலும் மண்ணெண்ணெய் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஜூலியா கூறுகையில், "நான் சமைக்க முயன்ற போது தான் பாமாயில் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது தெரிந்தது," என்றார். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் புகாரளித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...