கோவையில் மதுக்கடையாக மாறிய ஆவின் பாலகம் : மதுவிற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

கோவை : ஒண்டிப்புதூர் காவலர் சோதனை சாவடி அருகே செயல்பட்டு வந்த ஆவின் பாலகம், திடீரென மதுபானக் கடையாக மாற்றப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : ஒண்டிப்புதூர் காவலர் சோதனை சாவடி அருகே செயல்பட்டு வந்த ஆவின் பாலகம், திடீரென மதுபானக் கடையாக மாற்றப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே ஆவின் பாலகம் செயல்பட்டு வந்தது. இந்த பாலகமானது கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் இருந்தது. இப்படி இருக்க நேற்று திடீரென அந்த பாலகத்தின் பலகைகள் அடையாளங்கள் ஏதும் அகற்றப்படாமல் மது விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பாலகத்தில் மது விற்பனை செய்யக்கூடாது என முற்றுகையிட்டனர். அப்போது, மது விற்பனையாளர்கள், இந்த ஆவின் பாலகத்தை மதுக்கடையாக மாற்ற உரிமம் பெறப்பட்டு உள்ளது என தங்களின் உத்தரவு நகலை காண்பித்தனர்.

இருப்பினும், மதுவிற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், இப்பகுதியில் மதுக்கடை வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும், மீறி கடை வந்தால் கடையை நடத்த விட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.



இதையடுத்து, தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மதுக்கடை திறப்பதற்கான உரிமம் அவர்களிடம் உள்ளதால், பொதுமக்கள் கலைந்து போக வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், போலீசார் தற்காலிகமாக ஆவின் பாலகத்தில் நடைபெற்ற மது விற்பனையை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பாலகமும் மூடப்பட்டது. இதனிடையே, மதுக்கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...