கோவை : கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில், மதநல்லிணக்க உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியாவது, "நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும், இதனால் உறுதி அளிக்கிறேன்," என்ற உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (நிர்வாகம்) மோகனசுந்தரி, மாநகர கல்வி அலுவலர் கே.பழனி, மாணிக்கம் (வருங்கால வைப்புநிதி), குடிநீர் கணக்கு பிரிவு அலுவலர் லட்சுமிபிரபா, மற்றும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.