கோவை : குருசாமி நகர் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் பகுதியில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டார்.
கோவை : குருசாமி நகர் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் பகுதியில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம் 17-வது வார்டு குருசாமி நகர் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் பகுதியில் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கோவை மாநகராட்சியின் ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே. செந்தில் அரசன், செயற்பொறியாளர் (திட்டம்) எஸ். ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.