திருப்பூர் : திருப்பூரில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ராயபுரம் பகுதிக்குட்பட்ட முருகன் மன்றம் வீதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ளவர்கள் வழக்கம் போல தங்களது கார் மற்றும் ஆட்டோக்களை நேற்று வீட்டிற்கு வெளியே நிறுத்தி உள்ளனர். இன்று காலை வெளியே வந்து பார்த்தபோது, அங்கிருந்த காரின் முகப்பு கண்ணாடிகள் மற்றும் மிரர் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த பனியன் நிறுவன சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளில், அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் கற்களைக் கொண்டு கார் கண்ணாடியை தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளைக் கொண்டு திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.