கோவையில் காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.



கோவை மாவட்டத்தில் பேருந்துகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும் ஜேப்படி திருடர்கள் செல்போன்களை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்போன்களை திருடிச் செல்லும் கொள்ளையர்களை பிடிப்பது காவல்துறைக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், தற்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், காணாமல் போன செல்போன்கள் அனைத்தையும் உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 400 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இம்மாதத்தில் மீட்கப்பட்ட சுமார் 40 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தார். மேலும், செல்போன்கள் தொலைந்து போனது மற்றும் திருடப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறும்போது :- செல்போன் திருட்டு சம்பந்தமாக தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அதேபோல, மீட்கப்படும் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். கோவை மாவட்டத்தில் மணல் கொள்ளை, செல்போன் திருட்டு, கஞ்சா உள்ளிட்ட குற்ற சம்பவங்களைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தகவலளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து ரோந்து பணி திருப்திகரமாக உள்ளது.



கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. ஹெல்மெட் அணிந்து வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...