நீலகிரி : குன்னூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.

குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் பணிபுரியும் 61 இந்திய ராணுவ வீரர்களுக்கு, பணியின் போது தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட்டு தீயை அணைப்பது மற்றும் இடர்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கத்தினை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் நிலைய காப்பாளர்கள் செய்து காண்பித்தனர்.
இது குறித்து மெட்ராஸ் ராணுவ பயிற்சியாளர் ராஜ்குமார் கூறுகையில், "எங்கள் ராணுவ பணியாளர்கள் 20 அல்லது 22 ஆண்டுகள் பணியாற்றி மறுசுழற்சியில் பணிபுரியும் போது, பிரதம மந்திரி கோசல் விகாஸ் யோஜனபடி, ஒரு மாதம் அவர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தீ அணைப்பு குறித்த விளக்கங்களை தெரிந்து கொள்ள குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு வந்தோம். எங்களுக்கு சிறப்பான செயல்முறை விளக்கத்தை அளித்தார்கள்," என்றார்.