பருவமழையினால் பசுமையடைந்த மேட்டுப்பாளையம் வனம் : நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை ஆனந்தத்துடன் குடித்து மகிழும் வனவிலங்குகள்

கோவை : பருவமழைக்குப் பிறகு மேட்டுப்பாளையம் வனப்பகுதி பசுமையாக திரும்பிய நிலையில், நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை ஆனந்தமாக குடித்து தாகத்தை விலங்குகள் தனித்து வருகின்றன.

கோவை : பருவமழைக்குப் பிறகு மேட்டுப்பாளையம் வனப்பகுதி பசுமையாக திரும்பிய நிலையில், நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை ஆனந்தமாக குடித்து தாகத்தை விலங்குகள் தனித்து வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி மலை அடிவாரப் பகுதியாக திகழும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனத்தின் பெரிய உயிரினமான யானை மற்றும் மான், கரடி, செந்நாய், காட்டுமாடு, புலி, சிறுத்தை உட்பட பல்வேறு அரிய வன உயிரினங்கள் உள்ளன. கடந்த காலங்களில் போதிய மழையின்றி வனத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால் செடி, கொடிகள் காய்ந்தன. இதனால், வன விலங்குகளுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், தண்ணீர் இன்றி வன உயிரினங்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தன.



இந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலதாமதமாக துவங்கினாலும், நல்ல முறையில் பெய்ததால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வனத்தில் வறட்சியால் காய்ந்திருந்த செடி, கொடிகள், மரங்கள் தற்போது மீண்டும் துளிர்விட்டு பசுமைக்கு திரும்பியுள்ளன. வனம் முழுவதும் பசுமை போர்த்தியது போல் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. 



பரந்து விரிந்துள்ள இந்த வனத்தில் தாவர உண்ணிகளுக்கு தேவையான புட்கள் அதிக அளவில் காணப்படுவதால் வன ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் ஆங்காங்கே உருவாகிய நீரோடைகளினால், வனத்தின் நடுவே வனத்துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. இந்த நீர்நிலைகளை தேடி வரும் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் இதில் தண்ணீர் குடித்து தாகத்தை தனித்து வருகின்றன. வடகிழக்கு பருவமழையும் அக்டோபர் மாதம் துவங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு வனவிலங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பிரச்சனை இருக்காது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...