நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இன்று முதல் ஒரு மாதம் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்ட 41 தளவாடப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னூரில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று குடும்பத்துடன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று காலை சி.எப்.எல்.யு., டி.எப்.எல்.யு., என்.இ.யு. மற்றும் சி.டி.ஆர்.ஏ., தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் தொழிற்சாலை வளாகத்தில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், சி.எப்.எல்.யு., தொழிற்சங்க தலைவர் அசோகன், என்.இ.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலீப்குமார், டி.எப்.எல்.யு., தொழிற்சங்க இணை செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். அப்போது, இன்று முதல் ஒரு மாதம் காலம் பணி புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.