கோவை : கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் இரு வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்னிமடை அருகே உள்ள சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எம். கணேசன் (29). ஓட்டுநரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பணியை முடித்துக் கொண்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே புதரில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேறாத காட்டு யானை, நேற்று இரவு தொப்பம்பட்டி கிராமத்தில் உலா வந்து கொண்டிருந்தது. அப்போது, கணபதி கார்டன் பகுதியில் பிரேம் கார்த்தி தனது நண்பர் விக்னேஷ் என்பவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த யானை இருவரையும் தாக்கியது. இதில், பிரேம் கார்த்தி பலத்த காயமடைந்தார். விக்னேஷ் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இதைத் தொடர்ந்து, பிரேம் கார்த்தி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பன்னிமடையைச் சேர்ந்த கணேசனின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 நிவாரணமாக வனத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்டது.
கோவையில் ஒரே நாளில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
மேலும், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தல் குறித்து 180042545456 என்ற இலவச எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்துள்ளனர்.