ஈஷாவில் இந்திய ராணுவ வீரர்களுக்கான ஹதயோகா பயிற்சி இன்றுடன் நிறைவு

கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் 64 இந்திய ராணுவ வீரர்களுக்கு 14 நாட்கள் ஹதயோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் 64 இந்திய ராணுவ வீரர்களுக்கு 14 நாட்கள் ஹதயோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பு இன்றுடன் நிறைவு பெற்றது. இவ்வகுப்பில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், ஜே.சி.ஓ. அதிகாரிகள் உட்பட 64 வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அங்கமர்த்தனா, சூர்ய க்ரியா, உப-யோகா, அம் மந்திர உச்சாடனை, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த பயிற்சி வகுப்புகளை அவர்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ரீதியான பல்வேறு சவால்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். சில வீரர்களுக்கு, ஹதயோகா பயிற்சியாளர் ஆவதற்கான பிரத்யேக பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த வீரர்கள் தங்களுடைய ராணுவ முகாம்களுக்கு சென்று அங்குள்ள வீரர்களுக்கு ஹதயோகா கற்றுக்கொடுக்க உள்ளனர்.

இதற்கு முன்பு, 3 பி.எஸ்.எஃப் குழுவினருக்கும், ஒரு ராணுவ குழுவுக்கும் ஈஷாவில் 14 நாட்கள் நடக்கும் ஹதயோகா பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...