நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார்வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையை மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை சி.எப்.எல்.யு., டி.எப்.எல்.யு., என்.இ.யு. மற்றும் சி.டி.ஆர்.ஏ., தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் தொழிற்சாலை வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், குடும்பத்துடன் குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, சி.எப்.எல்.யு., தொழிற்சங்க தலைவர் அசோகன் பேசுகையில், "என்.இ.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலீப்குமார், டி.எப்.எல்.யு., தொழிற்சங்க இணை செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ஆகஸ்ட் 20-ம் தேதியில் இருந்து ஒரு மாதம் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என தெரிவித்தார்.