கோவையில் அத்துமீறி பள்ளி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி தாளாளர் மனு

கோவை : கோவையில் அத்துமீறி பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் பள்ளி தாளாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை : கோவையில் அத்துமீறி பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் பள்ளி தாளாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சக்தி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் வளர்மதி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார் அதில், அத்துமீறி பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பள்ளி தாளாளர் வளர்மதி கூறியதாவது :- பள்ளி இயங்கி வந்த இடத்தின் மொத்த பரப்பளவு 2.16 ஏக்கராகும். அதில், 1.68 ஏக்கர் நிலத்தில் பள்ளி இயங்கி வந்தது. எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் 70 பேர் பயின்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதுடன், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கட்டிடத்தை இடித்தவர்கள் மூலம் கொலை மிரட்டல்கள் வருவதால், எனக்கும், எனது உடைமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.

இது தங்களது குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சொத்து. சகோதரர் சக்திவேல் பெயரில் உள்ள இந்த சொத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் பள்ளி இயங்கி வந்தது. தனது சகோதரரின் மனைவி வேறு சிலருடன் இணைந்து எனது பள்ளி கட்டிடத்தை இடித்துள்ளார், எனக் கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...