திருப்பூர் : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு கடை வியாபாரியை தாக்கியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு கடை வியாபாரியை தாக்கியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிலை வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 23-ம் தேதி கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலையை வைப்பதற்கு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அப்பகுதியில் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள சிவா என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடையில் வசூல் செய்துள்ளனர். அப்போது, கடையின் உரிமையாளர் சிவா ரூ. 300 தந்துள்ளார். ஆனால், எங்களுக்கு ரூ. 1,000 வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர்.

இருப்பினும், அவர் தர மறுத்ததால் விஸ்வ ஹிந்து பரிசத்தைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உட்பட அவரது நண்பர்கள் 5 பேரும் பணம் தர மறுத்த சிவாவை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதனைக் கொண்டு, சிவா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, காவல்துறையினர் விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.