கோவை : கோவையில் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்துவதற்காக கும்கி யானை வெங்கடேஷ் சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

கோவையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளன. இந்த நிலையில், பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிகுமுதி யானைகள் முகாமில் இருந்து கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு கும்கி யானை வெங்கடேஷ் நேற்று அழைத்து வரப்பட்டது. கோவையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகளை விரட்டும் பணியில், சுயம்புவுடன் இணைந்து அனுபவமிக்க வெங்கடேஷ் பணியாற்ற உள்ளது. வெங்கடேசுடன் பாகன்கள் மாகாளி மற்றும் பிரசாந்த் ஆகியோரும் வந்தனர்.