குப்பைகளை அழித்து மின்சாரம் தயாரிக்கும் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சிக்கு அறிவுரை

கோவை : குப்பைகளை அழித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சி முன்வர வேண்டும் என கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் தனி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை : குப்பைகளை அழித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சி முன்வர வேண்டும் என கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் தனி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 850 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காய்கறி கழிவில் இருந்து காஸ் தயாரித்து மின்சாரமாக்கி தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் 'பிளான்ட்', வெள்ளலுார் கிடங்கில் அமைக்கப்பட்டுள்ளது. உரம் தயாரிப்பு மையம் எனும் 'மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்', தரம் பிரித்து குப்பை சேகரித்தல் என பல்வேறு திட்டங்களை செயல் படுத்தினாலும், மாநகரில் குப்பைகள் சேகரித்து அதனை அழிப்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாகவே உள்ளது.

இந்த நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சீனாவில் குப்பைகளை நிரந்தரமாக அழிப்பதற்கான நவீன தொழில்நுட்ப முறையை கோவையில் பயன்படுத்துவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும் என கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டியின் தனி இயக்குனர் கிருத்திகா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சீனாவில் ஒரு நிறுவனத்திடம் குப்பைகளை நிரந்தரமாக அழிப்பதற்கான தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. இந்த குப்பைகளை அழித்து அதிலிருந்து மின்சாரம் பெறும் இந்த தொழில்முறை குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் உடன் இது குறித்து பேசி உள்ளோம். எனவே, இந்த குப்பைகளை அழிக்கும் தொழில்நுட்பத்தை கோவை மாநகரில் கொண்டு வருவதன் மூலம் குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், என அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...