மாநிலங்களவை எம்.பி.ஆக மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்வு

கோவை : ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.

கோவை : ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, மீண்டும் அவரை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜெய்ப்பூரில் மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் முன்னதாக செய்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த எம்.பி. மதன்லால் சைனி, கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி வரை இருக்கிறது. எனவே, மன்மோகன் சிங் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.யாக இருக்கலாம்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...