கோவை : துடியலூர் அருகே நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : துடியலூர் அருகே நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்னிமடை அருகே உள்ள சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எம். கணேசன் (29). ஓட்டுநரான இவர் நேற்று நள்ளிரவு பணியை முடித்துக் கொண்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே புதரில் மறைந்திருந்த காட்டு யானை கணேசனை கடுமையாக தாக்கியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த கணேசனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே, காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தல் குறித்து 180042545456 என்ற இலவச எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்தனர்.